Tuesday, September 5, 2017

சைவம்

ஜெ

வண்ணக்கடலில் அத்தனை தர்சனங்களும் சாங்கியத்தில் ஆரம்பிக்கின்றன. உணவையும் நிலத்தையும் வழிபடுவதில் இருந்தே  சாங்கியம் ஆரம்பிக்கிறது. அதுவே ஆதிவழிபாடு. அதைத்தான் பூதவழிபாடாக கொள்கிறார்கள். அது தென்மதுரையிலே இருப்பதாக எழுதுகிறீர்கள். கிராதத்தில் ஆதிவழிபாடு குடும்பத்தை வழிபடுவதாக வருகிறது. அதுதான் சோமாஸ்கந்தர். மூதாதை. மூத்தன்னை. இந்த சித்திரங்களை இணைத்தால் என்க்கு என்ன தோன்றுகிறது என்றால் சைவத்தில் இவை எல்லாமே ஒன்றாக இணைந்திருக்கின்றன என்றுதான். இதை தெளிவில்லாமல் யோசித்துக்கொண்டிருந்தேன். தெளிவில்லாமல் யோசிக்கும்போதுதான் பெரிய மனக்கிளர்ச்சி உருவாகிறது


செல்வ மாரிமுத்து