Tuesday, September 5, 2017

கோலாஹலம்


ஜெ,

இடைவெளியில் ஒரே மூச்சில் இந்திரநீலம் வாசித்துமுடித்தேன். அதன் மிகச்சிறந்த பகுதி தொடக்கத்தில் வரும் துவாரகைப் பெண்களைப்பற்றிய வர்ணனை. மிகமிகச் செறிவானது. ஆனால் பெருமளவுக்குப் பூடகமானது.  முதலில் நான் வாசித்தபோது அதை வாசிக்கவே இல்லை என்று நினைக்கிறேன். அப்போது கதையோட்டம் முக்கியமானதாகப்பட்டது. உண்மையில் தொடராக வாசிப்பதில் நவாலின் சிக்கலான அமைப்பு பிடிகிடைக்காமல் செல்கிறது. உதாரணமாக துவாரகையின் வர்ணனையில் உள்ள இந்த களியாட்டத்தைத்தான் வைஷ்ணவ மரபு கோலாஹலம் என்கிறது. கோலாஹலனாகிய கிருஷ்ணனின் இருப்பிடம். அந்தக்கோலாஹலத்தின் வடிவமாகவே பின்னர் அந்த சியமந்தக மணி வருகிறது. அதை ஒவ்வொருவரும் எப்படி அணுகுகிறார்கள் என்பதுதான் நாவலின் அமைப்பு. காமம் என்று சொல்லலாம். ஆனால் வைஷ்ணவத்தில் காமம் என்பது கிருஷ்ணமாயைதான். அந்த ஆரம்பகட்ட காதல்களியாட்டத்தின் வழியாகச் சென்றால்தான் கடைசிவரை நாவலை ஒன்றாக்கிய அம்சம் என்ன என்பது பிடிகிடைக்குமென நினைக்கிறேன்


பார்த்தா