Sunday, October 15, 2017

கடத்திச் செல்லும் காதல் (எழுதழல் 17- 18)




    இவ்வுலகம் ஒரு பெரிய அடுக்குக் குடியிருப்பு போன்றது. அதனுள் ஒவ்வொருவரும் ஒரு தனி வீட்டில் வசிக்கின்றனர். ஒவ்வொரு குடும்பமும் தனித்தனி உலகம். அந்தந்த உலகத்தில் அவர்கள் உரிமையுடன் வசிக்கின்றனர்குடும்பத்தில் ஒருவர் மிகவும் பாதுகாப்பாக உணர்கிறார். கோழிக்குஞ்சை தாய்க்கோழி காப்பதைப்போல ஒரு குடும்பம் அதில் வசிக்கும் நபர்களை காத்துவருகிறதுகுடும்பத்திலிருந்து வெளியில் வரும் ஒருவர் பேருலகில் தனித்து விடப்பட்டதாக உணர்கிறார். அப்போது  தனிமையும்  பாதுகாப்பின்மையும் அவரை  வெகுவாக அச்சுறுத்துகிறது.    அதனால் ஒருவர் தன் குடும்பத்தை விட்டு வெளியில் வருவதற்கு பெரிதும் தயங்குவது சரியானதே.   தாய் தந்தை மகன்கள் மகள்கள் மற்றும் சில நெருங்கிய் உறவினர்களை உள்ளடக்கியது அந்த சிற்றுலகங்கள்ஒரு குடும்பத்திலிருந்து இன்னொரு குடும்பத்திற்கு செல்வது இருவர் மணம் புரிவதில் நடக்கிறது.   அல்லது இருவர் மணம் புரிகையில் ஒரு புது குடும்பத்தை உருவாக்குகிறார்கள். இது சமூக ஒப்புதலோடு நடக்கிறது.    இப்படி பேருலகில் குடும்பங்கள் சிறு சிறு பகுதி உலகங்களாக இருக்கின்றன


    ஆனால் ஒரு குடும்பத்திலிருந்து  அவ்வப்போது இளையவர்கள்  கடத்தப்படுவது நடக்கிறது. தன் பெற்றோருடனும் உற்றோருடனும் நேசமும் அன்பும் பெற்று இருந்த ஒருவர் திடீரென்று  இவற்றைப்பொருட்படுத்தாமல் குடும்பத்திற்கு தன்னை அந்நியமாக உணர்கிறார். குடும்பத்தை விட்டு தொலைந்து போய்விடுகிறார். அவரை குடும்பத்தினர் தேடிக்கண்டுபிடித்து திரும்ப குடும்பத்துக்கு அழைத்து வர மிகவும் பாடுபட வேண்டியிருக்கிறது. பல சமயங்களில்  அப்படி திரும்ப அழைத்துவருவது இயலாமல் போய்விடுகிறது.    ஒரு பெரும் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளதத்துவங்களை பயின்று அதன்படி நடக்க, என்பதுபோன்ற  உயர் காரணங்களும்மது போன்ற போதைகளுக்கு  அடிமையாதல், போன்ற கீழான காரணங்களும் இருக்கின்றன. சிலர் கலைத்துறையில் ஈடுபடுவதற்கு குடும்பத்தினர் சம்மதிக்காத காரணத்தால் குடும்பத்திலிருந்து வெளியில் செல்கின்றனர்.   ஆனால் இளைஞர்கள் தம் குடும்பத்தைவிட்டுச் செல்வதில்   அவர்களுக்கு ஏற்படும் காதல் முக்கிய பங்காற்றுகிறது.


      தனக்கு தேவையான ஆடையை தேர்ந்தெடுக்க தன் கல்வி தொழில் போன்றவற்றில் முடிவெடுக்க என அனைத்திலும் குடும்பத்தினரின் ஆலோசனைகளை கேட்டறிந்து நடந்துகொள்ளும் ஒருவர் காதலில் இப்படி ஆலோசனை எதுவும் கேட்பதில்லை. ஒருவருடன் காதல் கொள்வதில் குடும்ப நலன்களை அலட்சியப்படுத்துகிறார். தன்னுடைய நலன்கள்  பாதிப்படைவதைப் பற்றியும்  அவர் கவலைகொள்வதில்லை. இப்போது இருக்கும் வசதியான வாழ்வு, பேர், புகழ் ஆகியவற்றையெல்லாம் தன் காதலுக்காக இழக்கத்  துணிகிறார்தன் உயிரையே காதலுக்கு  பணயம் வைப்பவர்களையும்  பார்த்திருக்கிறோம்


      ஒரு குடும்பத்திற்கு ஒரு திருமணம்  தன்னை பெருமிதமாக காட்டிக்கொள்ளும் நிகழ்வாக இருக்கிறது. அது   சமூகத்தில்   இரு குடும்பங்களுக்கிடையே ஏற்படும் புது பந்தமாகிறது. அது   சமூக கட்டுமானத்தில் இன்னொரு புதிய இணைப்பை உருவாக்குகிறதுஆகவே ஒரு திருமணம்  குடும்பத்தினரின் புகழை ஓங்கச்செய்வதாக இருக்கவேண்டும். இரு குடும்பத்தினரை ஒற்றுமைப்படுத்தும் ஒன்றாக, சமூகம் இருந்துவரும் தற்போதைய பண்பாட்டுக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும்.   அதனால் ஒரு திருமணம் நடத்துவதில்பொருத்தமான வரனைத்  தேர்தெடுப்பதில் குடும்ப உறுப்பினர்கள் மிகவும் கவனத்துடன் பல கூறுகளை ஆய்ந்து முடிவுகளைச் செய்கின்றனர்இன்னும் அரச குடும்பங்களில், செல்வந்தர் இல்லங்களில், ஒரு திருமணம் மேலும் பல விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. அதனால் குடும்பம் திருமண விஷயத்தில் மிக மிக எச்சரிக்கையுடன் நடந்துகொள்கிறது


  ஆனால் இருவருக்கு ஏற்படும் காதல் உணர்வு இவற்றையெல்லாம் பெரிதாக சிந்திப்பதில்லைகாதலர் தங்கள் குடும்பத்தைதாங்கள் இருக்கும் சமூகத்தை, என  அனைத்தையும் தங்கள் காதலுக்காக எதிர்க்கத்  துணிகிறார்கள்சமீபத்தில் அறிமுகமான ஒருவருடன் இணைந்துகொள்ள இதுவரை தன்னை பேணிப்  பாதுகாத்து வளர்த்த பெற்றோரை எதிர்க்கத் துணிவதில் என்ன தர்க்க நியாயம் இருக்கிறதுகாதலுக்காக அவர்களை நேசிக்கும் பெற்றோர் உற்றாரை எதிர்ப்பது  முட்டாள்தனம் என்று தோன்றுகிறதுஅதே நேரத்தில் சமூகம்இப்படி குடும்பததைசமூகத்தை எதிர்த்து நிற்கும் காதலை போற்றவும் செய்கிறது. பக்தி இலக்கியங்களுக்கு நிகராக காதல் இலக்கியங்கள் இருக்கின்றனகாதல் ஊடுருவாத கலை என்று எதுவுமில்லை. இந்த முரண்பாடு சிந்திக்கத்ததக்கது.  


   உண்மையில் முதலில் தோன்றியது காதல்பின்னர்தான் மற்ற உறவுகள்அதற்கப்புரம்தான் சமூக கட்டமைப்பு தோன்றியிருக்கும்  என்று நினக்கிறேன்காதல்தான் சமூகம் உருவாக அடிப்படைக்காரணமாக இருந்திருக்கும்விலங்குகளாக  இருந்த மனிதர்  காதல் கொண்ட காரணத்தால்  இருவராக இறுதிவரை  இணைந்து வாழத் தொடங்கினர். அதன் காரணமாக தம் குழந்தைகளை நீண்ட காலம் தம்முடன் வைத்து வளர்க்க முடிந்தது. அதனால் அண்ணன் அக்கா தம்பி தங்கை போன்ற உறவுகள் வந்தன. அடுத்தடுத்து அவை மேலும் மேலும் உறவுகளை உருவாக்கிகொண்டன. பெரிய கூட்டுக்குடும்பமாக  இருந்தது நெறிகளை உருவக்கிகொண்டு சமூகமாக விரிந்தது. சமூகங்களில். அறிவுகள் பகிர்ந்துகொள்ளப்பட்டு அடுத்த தலைமுறயினருக்கு கடத்தப்பட்டு தொழில் நுட்பம்அறிவியல்கலைஇலக்கியங்கள் என அனைத்தும் வளர்ந்தன.   காதலென மாறாமல் வெறும் காமத்தினால் மட்டுமே குறுகியகாலம் ஒன்றுசேர்ந்து வாழும் மற்ற விலங்கினங்களில் இத்தகைய சமூக அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்ஆகவே காதல் என்பது சமூகக் கட்டுமானங்களைவிட மற்ற உறவுப் பிணைப்புகளைவிட இயற்கையானது. மற்ற உறவுகள் மனிதகளுக்கு கற்பிக்கப்படுகின்றன. ஆனல் காதல் உணர்வு அவர்கள் ஜீவ அணுக்களிலில் எழுதப்பட்டிருப்பது.


    ஒரு ஆணுக்கும் பெண்ணிற்கும் ஏற்படும் காதலில் இயற்கை முக்கியப் பங்காற்றுகிறதுஒருவர் மற்றொருவர்மேல் காதல் கொள்வதில் அவருடைய அறிவைவிட அவருடைய உள்ளுணர்வுக்கு அதிக பங்கிருக்கிறது. இதில் நமக்குத்  தெரிந்தும் தெரியாமலும் பரிணாம விதிகள் பல  வேலை செய்கின்றன என நினைக்கிறேன்.   காதலிணை சேர்வதில் மூளைக்கு அதிக அளவு பங்கில்லை என்பதால்காதல் தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டுப்  போவதை நாம் புரிந்து கொள்ளலாம்ஆகவே  ஒருவர் காதல் காரணமாக குடும்பத்திலிருந்து அவர் சார்ந்த சமூகத்திலிருந்து விட்டு வெளியேறுவது பரவலாக நடைபெற்றுவருகிறது.


    இப்படி காதலின் காரணமாக குடும்பத்தை விட்டு வெளியேறுவது புராண காலத்திலிருந்தே இருப்பதாக கூறப்பட்டு வருகிறதுவெண்முரசு அதைப்போன்ற நிகழ்வுகள் பலவற்றை நமக்குக் காட்டியிருக்கிறது. ருக்குமணி தன் குடும்பத்தை புறக்கணித்து தன் அண்ணன் ருக்மிக்கு பெரும் அவமானம் எற்ற்படும் விதத்தில் அவள் கண்ணனுடன் செல்கிறாள். இப்போது உஷை, தன் தந்தை பாணரின் கடுமையான கண்காணிப்பையும் மீறி காதலில் விழுகிறாள். அநிருத்தன் அவள் படத்தைப்பார்த்து காதல்கொண்டு தன்னை கடத்திப்போக அனுமதிக்கிறான். அவனை உயிராக நேசிக்கும் உறவுகளும் நட்புகளும் இருந்த கோகுலத்திலிருந்து  அவனை கடத்திப்போவது சித்ரலேகை தன் மாயக் கண்னாடியில் புகுத்தியல்ல அவனை காதலில் பொதிந்துதான்  அவள் கடத்திச்செல்கிறாள்.   அவனை காதல் அல்லாமல் வேறு எதுவும் கோகுலத்திலிருந்து கடத்திச்சென்றிருக்காது என்பதை நந்தகோபர்  அறிந்திருக்கிறார்.


அக்கணம் ஓர் நம்பிக்கை அவருக்கு வந்தது, எந்த அடிப்படையுமில்லாத நம்பிக்கைகளுக்குரிய உறுதியுடன். “அவன் தன் வெற்றி ஒன்றை தேடிச் சென்றிருக்கிறான். சிறுவனாகச் சென்றவன் ஆண்மகனாக மீள்வான்என்றார்.


   பெரும்பாலும்இறுதியாக  காதலர்களின் அனைத்து தர்க்கமுர்ண்களையும் பொறுத்துக்கொண்டு சமூகம் காதலுக்கு தலைவணங்குதல் எப்போதும் நடக்கிறது.   ஏனென்றால் சிதறிப்போகாமல் சமூகத்தை இழுத்துபிடித்து கட்டியிருக்கும் கயிறு காதல்தான் என்பதை சமூகம் அறிந்தே இருக்கிறது.
  

 இளவரசியின் அறைக்கதவை இரு கைகளாலும் தட்டிஉஷை, கதவை திற!” என்று குரலெழுப்பினார் அசுரர்க்கரசர். உள்ளே தாழ் திறக்கும் ஒலி கேட்டது. கதவுகள் இருபுறமும் விரியத்திறக்க நடுவே புன்னகையுடன் அநிருத்தன் நின்றிருந்தான். அவனுக்குப் பின்னால் அவன் தோள் மறைத்து பாதி முகம் காட்டி உஷை நின்றாள். அநிருத்தன்வணங்குகிறேன், அசுரப் பேரரசரே. நான் விருஷ்ணிகுலத்து யாதவன். துவாரகையை ஆளும் இளைய யாதவரின் பெயர்மைந்தன்என்றான். மலைத்த விழிகளுடன் நோக்கி ஓர் எட்டு பின்னடைந்த பாணர் கைகூப்பி தலைவணங்கினார்.

தண்டபாணி துரைவேல்