Wednesday, October 11, 2017

எழுதழல் வாசிப்பு



அன்புள்ள ஜெ சாருக்கு ,


நலமா ? உங்களின் இடைவிடாத பயணங்களை எண்ணி நான் ஆச்சர்ய பட்டுக்கொண்டே இருக்கிறேன் . 

நான் ஒரு அமெரிக்கா உடல்நல சேவை கம்பனிக்கு Backend developer ஆக பணிபுரிகிறேன். இந்தியாவில் கால் பதிக்க உள்ளார்கள். இன்னும் ஒரு ஆண்டில் (patientmd.com ). ஆகவே வேலையை விரைவில் முடிக்கும் பொருட்டு தொடர்ந்து வேலை செய்ய வேண்டி உள்ளது . நேற்றைய முன்தினம் இரவு 1 மணி அளவில் , தூக்கம் சொக்குகிறது. வழக்கம் போல் , வெண்முரசை படித்தேன். படையாழியுடன் இளைய யாதவர் போரில் நுழையும் காட்சி. என்னால் அதன் பிறகு அன்று உறங்கவே முடியவில்லை. இப்படியும் விசுவலாகவே எழுதி விட முடியுமா? பாகுபலியில் ராணாவின் அந்த சங்கிலியில் பிணைக்க பட்ட கதை . நீங்கள் அதை துருபதனுடன் அர்ஜுனன் போரிடுகையில் , பீமன் பயன்படுத்துவதாக எழுதி உள்ளீர்கள். அதே போல், மதன் கார்க்கியின் "மகிழ்மதி உயிர்த்து எழு . என் மகன் வந்துவிட்டான் . பாஹுபலி மீண்டுவிட்டான் " என்ற வாக்கியத்தில்  வரும் "மீண்டுவிட்டான் " எப்போதும் உங்களையே நினைவு படுத்தும் . நான் 2015, 2016இல் விகடன் வசித்து வந்தேன் . அதில் நியாஸ் அஹ்மத் என்பவர் , ஒரு முறை, ராகுல் காந்தியை குறித்த கட்டுரையில் "ராகுல் உடனடியாக செய்ய வேண்டியது இந்தியா முழுவதுமான குறுக்கு விட்டன நீண்ட பயணம்". இதுவும் நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் அந்த நேரு இறந்த வருடம் , நீங்கள் செய்த ரயில் பயணத்தை குறிப்பிட பயன்படுத்தும் சொற்கள். உங்கள் சொற்களின் வாயிலாகவே நான் வாழ்வின் மீது நம்பிக்கை கொண்டேன். இணையாகவே அ .முத்துலிங்கம் அவர்களின் "கடவுள் தொடங்கிய இடம்" கதை மூலமாகவும் . உங்கள் சொற்கள் மக்களை சென்று அடைந்து கொண்டே இருக்கிறது. வயலுக்கு பாயும் தண்ணீரில் வரப்பின் புற்களும் பசுமை கொள்வதை போல. இவர்கள் உங்களை copy செய்தார்கள் என்று சொல்ல வரவில்லை. 

சௌம்யா