Friday, December 8, 2017

கிடந்த கோலம் (எழுதழல் 78)



   
ஞாயிறு தன் கதிரொளி பரவ எழ இருக்கிறது. அதை எதிர்பார்த்து கூவுகின்றன பறவைகள். இளம் குழந்தைகள் சிணுங்கி கண் விழிக்கின்றன, ஞாயிறின் இன்னொளியை தன்னுள் நிரப்பிக்கொள்ள விரிகின்றன பூக்கள்பூமி தன் பனிப்போர்வையை விலக்கி துயிலெழுகிறதுஇதோ ஞாயிறு முழுதுமாக வெளிவந்துவிட்டதுஅது  வரும் வழியில் மலர்களை உதிர்க்கின்றன மரங்கள்.   நீள்துயிலில் இருந்த தாவரங்கள் தம் விதைக்கூட்டிலிருந்து விழிதெழுகின்றனஅதே நேரத்தில் சில தெரு நாய்கள் சுடர்விடும் ஞாயிறைக்கண்டு கண் கூசி குரலெழுப்பி குரைக்கின்றனநச்சரவங்கள் அதன் வெம்மை தாங்க இயலாமல் புற்றுக்குள் புகுந்துகொள்கின்றனஒளிந்துகொள்ள இயலாத    புழுக்கள் அதன் வெப்பம் தாங்காமல்  துடிதுடித்து இறக்கின்றனஞாயிறின் இருப்பினால்தான் பூமி சுழல்கிறது பருவங்கள் தோன்றுகின்றன.     பூமியில்  பலவாறாக   தட்பம் வெப்பம் குளிர் மழை காற்று வறட்சி என சூழல் மாற்றங்கள் நிகழ்வதற்கும்,   பெரும் வனங்கள் தோன்றுவதற்கும் அழிவதற்கும்,   நதிகள் உருவாகி பெருகி பாய்ந்தோடுவதற்கும் வறண்டு காய்ந்து போவதற்கும்பெருங்கடல் பொங்குவதற்கும் தணிவதற்கும் , என உலகின் அனைத்து  பௌதீக நிகழ்வுகளுக்கும் அடிப்படையாக அமைவது  ஞாயிறின் இருப்பே என அறிஞர்கள் கூறுகிறார்கள்.
 
இத்தனை நிகழ்வுகளுக்குமான பொறுப்பை நாம் ஞாயிறின் மீது சுமத்தி அது நல்லது , கெட்டது என நம்மால் வகைப்படுத்த முடியுமாஇவற்றுக்காக ஞாயிறை நாம் புகழவோ குறைசொல்லவோ இயலுமாஅதன் இருப்பால் மாத்திரமே   இவ்வளவு நிகழ்வுகள் நடந்தாலும் இந்நிகழ்வுகளின்  நல்லவை கெட்டவைகளுக்கு நாம் ஞாயிறை காரணம் சொல்ல முடியுுமா,?
 
எழுதழல் முழுதிலும் கிருஷ்ணனின் இருப்பை நாம் உணர்கிறோம். ஆனால் அவன் நேரில் தோன்றுவது பேசுவது ஒரு கருத்தை தனதென உதிர்ப்பது மிகக் குறைவாகவே இருக்கிறது. அபிமன்யுவிற்கு திருமணம் செய்யச் சொல்லுதலும்  உபபலாவ்யத்தில்  நடக்கும் ஒரு விவாதத்தில் ஆற்றும் ஒரு சிறு உரையும் தவிர அவன் சொல்லென செயலென பெரிதாக எதுவும் இருப்பதில்லைஆனால் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம்  அவனை மனதில் கொண்டே நடக்கின்றன.   அவனை மனதில் வைத்தே அனைத்து அரசு சூழ்தல்களும் நடக்கின்றன. அவன்  மைந்தர்கள் பிணக்கு கொள்கின்றனர். யாதவர்கள் அவன் தங்களுக்கு தீங்கு செய்துவிடுவான் என்று அவனிடம்  பகை கொள்கின்றனர்.   அவன் இதை ஏற்றுக்கொள்வான் என்று  உபபாண்டவரகள் தம் அரசு சூழ்தல்களை அமைக்கின்றனர்.   தேவகி அவனை மனதில்கொண்டு வஞ்சினம் உரைத்து அதற்கு பலராமனையும் கிருஷ்ணனின் அனைத்து மைந்தர்களையும் இணங்க வைக்கிறாள்அவன் அருகாமையை அவன் துணைவியரை ஒன்று படுத்துகிறதுஅவன்  மைந்தர்களை விலகிப்போக வைக்கிறதுஅவனிடம் கொண்டிருக்கும் நட்பும் மதிப்பும் பாண்டவர்களை வழி நடத்துகின்றது. அவனிடம் கொள்ளும் விலக்கம் கௌரவர்களை போருக்கு ஆயத்தமாக்குகிறது.        ஆனால் அவன் இது எதையும் சிந்திக்காதவனாக துயின்றுகொண்டிருக்கிறான்   கிருஷ்ணன்
 

இடக்கையை தூக்கி தலைக்குமேல் வைத்திருந்தார். வலக்கை தொடைமேல் படிந்திருந்தது. வலது தோளருகே படுக்கையிலேயே படையாழி இருந்தது. இடது தோளருகே இரவில் அறைக்கு நறுமணம்சேர்க்க வைக்கப்பட்டிருந்த செந்தாமரை மலர். வெண்ணிற ஆடையின் சீரான சுருக்கங்களும் மார்பில் அப்போது அணிவித்தவை எனப் படிந்திருந்த ஆரங்களும் அவர் துயிலில் அசைவதில்லை என எண்ணச் செய்தன.

இளைஞனுடையது போன்று சிறிய உறுதியான உடல். தோள்கள், கைகள், மார்பு, வயிறு என அவன் நோக்கிக்கொண்டிருந்தான். ஒவ்வொன்றும் முழுமை கொண்டிருந்தன. ஆனால் மானுடமல்லாத ஏதோ ஒன்றிருந்தது. அது ஒரு கரிய சலவைக்கல் சிலை என்று எண்ணச்செய்தது. நீள்வட்டமான முகம். புன்னகை விலகமுடியாதவை போன்ற சிறிய உதடுகள். கூரிய சிறுமூக்கு. கொழுங்கன்னங்கள். அவன் ஒரு திடுக்கிடலை அடைந்தான். அவருக்கு இளைய தந்தையின் அகவை. மைந்தருக்கு மைந்தர் மணம்புரிந்துகொண்டுவிட்டார். ஆனால் அங்கு படுத்திருந்த உடலில் இளமை மாறாமலிருந்தது. அவன் இன்னொரு அதிர்வோடு அவ்வுடலின் சிறப்பு என்ன என உணர்ந்தான். கழுத்திலோ கைகளிலோ புறங்கையிலோ எங்கும் நரம்புகளே தெரியவில்லை. 

அது பிரம்ம நித்திரை. அகண்ட கருவறையில் பள்ளி கொள்ளும் ஆதிகேசவனின் தோற்றம்செயல் புரிபவனுக்கே நரம்புகள் புடைத்தெழுந்து தெரியும். அவனோ செயலற்றவன். ஆகவே குழந்தையைப்போன்ற உடல் கொண்டிருக்கிறான்.   அவன் நின்று செயல் புரிந்தாலும்இருந்து உரை செய்தாலும்,   கிடந்து செயலற்று இருந்தாலும் ஒன்றுதான். அதனால்தான் அவன் இறை என இருக்கையில்  நின்ற, இருந்தகிடந்த கோலங்களில் வணங்கப்படுகிறான்
     
வரவிருக்கும் போருக்காக அவன் துணைதேடிவருகின்றனர்  துரியோதனனும் அர்ச்சுனனும்.   இளஞாயிறு தொடுவானத்திலிருந்து புதிதாக எழுவதைப்போல  துயிலெழுகிறான்   கிருஷ்ணன் தான் போர் செய்யப்போவதில்லை எனக் கூறுகிறான்இது துரியோதனனை மகிழ்விக்கிறது. துரியோதனன்கிருஷ்ணன் போரில் இறங்காமல் ஆயுதம் எடுக்காமல் இருந்தால் போதும் என நினக்கிறான்அது மூடத்தனம் அல்லவாபூமியில் நிகழ வேண்டியவைகளுக்காக ஞாயிறு   மண்ணில் இறங்கிவரவேண்டுமோகிருஷ்ணன் ஒரு  ஞான சூரியன்.   அவன் இருப்பொன்றே போதும். அதுவே அனைத்தையும் நிகழ்த்தும். அதை அறிந்தவனென அர்ச்சுனன்  இருக்கிறான்


போர் நிகழுமென்றால் நான் வெறுங்கையுடன் மட்டுமே களம்புக முடியும், பார்த்தாஎன்றார் இளைய யாதவர். “தாங்கள் களம்புகவேண்டுமென்பதுகூட இல்லை. துவாரகையிலேயே இருப்பீர்கள் என்றால்கூட எனக்கு மாற்று எண்ணமில்லை. தங்கள் அடியவனாக நான் களமெழ முடிந்தால் அது போதும்.”


 சக்கரம் சுற்றுவது  அதன் அச்சை ஆதாரமாகக்கொண்டுதான். ஆனால் ஒரு சுழலும் வண்டிச் சக்கரத்தின் சுழலாதிருக்கும் பாகம்  அந்த அச்சுதான் அல்லவா?    அப்படியே கிருஷ்ணனை  மையமாக வைத்தே எழுதழலின்  நிகழ்வுகள் அமைந்திருக்கின்றன. ஆனால் அந்நிகழ்வுகளில் அவனின் பங்கு  இல்லை அல்லது மிகவும்  குறைவானதாக இருக்கிறது.  


தண்டபாணி துரைவேல்