Saturday, December 9, 2017

வேறுபாடு



ன்புள்ள ஜெ,

நலம்தானே?

வெண்முரசின் ஆரம்பகால நாவல்களில் இருந்து எது இப்போதுள்ள நாவல்களில் வேறுபடுகிறது என்று பார்த்தேன். முதற்கனல் இப்போது வாசிக்கும்போது சுருக்கமாக இருப்பதுபோலத் தெரிகிறது. முதற்கனலிலே கூட முதல்பாதியைவிட இரண்டாம்பாதி இன்னும் விரிவானது. பின்னர் மழைப்பாடலில் மிக விரிவான நிலக்காட்சிகளும் அரசியல்சூழ்ச்சிகளும் கதாபாத்திரங்களின் இயல்புகளும் இருந்தன. அதன்பின் மேலும் மேலும் விரிந்துகொண்டே வந்தன. இப்போது மிகச்செறிவாகவும் மிக விரிவாகவும் உள்ளது வெண்முரசு. பொதுவாக எழுத எழுதச் சுருங்கி கடைசியில் தேய்ந்திறுவதாகவே எழுத்தாளர்கள் நவால்களை எழுதுவார்கள். இப்படி விரிவது உங்கள் மனம் அதிலே எந்தளவுக்கு ஈடுபட்டுள்ளது என்பதற்கான சான்று.

ஒற்றைக்கொம்பு துணையிருக்கட்டும்.


ஜெயராமன்