Thursday, December 7, 2017

யாதவர்களின் அழிவு



அன்புள்ள ஜெ

ஏதோ ஒருவகையில் யாதவர்களின் அழிவை கண்ணன் விரும்பியதாகவே அத்தனை புராணங்களும் சொல்கின்றன. பாகவதம் என்ன சொல்கிறதென்றால் கிருஷ்ணன் யாதவர்கள் அழியவேண்டும் என்று தவமிருந்து சிவனை வேண்டி சாம்பனைப்பெற்றாராம். அந்த அழிவுக்கு என்ன காரணம்? அது கண்ணனின் லீலை என்று சொல்லிவிட்டுச் செல்வார்கள். என்னதான் இருந்தாலும் கம்சன் போன்ற ஒருவனை ஏற்றுக்கொண்டதுதான் என்று வெண்முரசு சொல்லும்போது ஆமாம் என்று சொல்லவே தோன்றுகிறது.

அதன்பின்னர் வெண்முரசில் எங்கெல்லாம் கண்ணன் மதுரா உறவும் மதுரா மக்களின் இயல்பும் வருகின்றன என்று பின்னால் சென்று பார்த்தபோது  இந்த அம்சம் வந்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். இது வெண்முரசு முன்வைக்கும் தொடர்ச்சியான ஒரு தர்க்கம் என்று தெரிந்துகொண்டேன்


எஸ்.ராகவன்