Saturday, December 9, 2017

நிலைபெயராமை



பதினைந்துநாள் இடைவெளி முக்கியமானது ஜெ. அப்போதுதான் என்னால் வெண்முரசை மீண்டும் தொகுத்துக்கொள்ள முடிகிறது. வெண்முரசிலிருந்து நெடுந்தொலைவு செல்லவும் முடிகிறது. இப்போது நான் வாசித்துக்கொண்டிருப்பது பிரயாகை. நிலைபெயராமையை அறம் எனக்கொண்ட துருவனின் கதையை. துருவன் பிரதிபலிக்கும் நதி தான் பாஞ்சாலி. அவள் ஐந்து பிரயாகைகள் வழியாக ஒழுகினாலும் அவளில் துருவன் நிலைபெயராமல் இருக்கிறான். அந்த வரியை இப்போதுள்ள வரிகளுடன் சேர்த்துவாசிப்பது பெரிய திறப்புகளை அளித்தது


செந்தில்ராஜ்