Friday, December 29, 2017

அன்பில்லாமை



ஜெ

தான் அன்பில்லாதவராக ஆகிவிட்டேன் என்றும் அது பெரிய விடுதலை என்றும் பீஷ்மர் சொல்வதும் ஒரு வகையில் அதை காந்தாரி புரிந்துகொள்வதும் எனக்கு பெரிய ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. கொஞ்சம் வயதானவன் என்பதனால் நானே இதை உணர்ந்துகொண்டிருக்கிறேன். சுயநலம் சார்ந்த அன்புதான் கொஞ்சமாக மிச்சமிருக்கிறது. என்ன தோன்றுகிறதென்றால் என்னைச்சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி கெட்டசெய்திகள் என்னை வந்துசேரவேண்டாம் என்று தோன்றுகிறது. எனக்குத்தெரியாமலிருந்தால்போதும் என்னவேண்டுமென்றாலும் நடக்கட்டுமென்று நினைப்பேன். இது அன்பில்லாத மனம்தானே என்று நினைப்பேன். அதைத்தான் பீஷ்மரின் நிலையில் கண்டேன். அது இயல்புதான் என்று தோன்றியது


கல்யாணராமன்