Friday, December 15, 2017

தலைவன்




ஜெ

இன்று வாசிக்கையில் கடையனில் கடையர்களிடமிருந்து எப்படி தலைவன் உருவாகிறான் என பத்மர் சொல்லும் ஒருவரி நெஞ்சில் நின்றது. முக்கியமான வரி அது. அவர்கள் அவனைநோக்கிச் சிரித்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அச்சிரிப்பு எப்போது அவர்களின் மனதில் ஆராதனையாக மாறியது என்று தெரியவில்லை என்று சொல்லும்போது பத்மர் இப்படிச்சொல்கிறார்


முக்கியமான இந்த அப்சர்வேஷனைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். அறிஞர் பேசும்போது மக்கள் அதை தங்கள் முழுமனதாலும் எதிர்க்கிறார்கள். ஆகவே எதிரிநிலை எடுக்கிறார்கள். தங்களில் ஒருவன் முட்டாள்தனமாகப்பேசினாலும் அதனுடன் இணைந்துகொள்கிறார்கள். சமகால அரசியலை இதைவிடக்கூர்மையாகச் சொல்லிவிடமுடியாது


ராஜன்