Saturday, December 16, 2017

யோகம்



அன்புள்ள ஜெ

டி.டி.கோசாம்பி கீதையை மாபெரும் இலக்கியத்திருட்டு என்று சொன்னார் என்று நீங்கள் எழுதியதை வாசித்தேன். யுஜ் என்ற தாதுவிலிருந்து வந்தது யோகம் என்ற சொல். கீதை தனித்தனியான யோகங்களாலானது. யோகம் என்றால் இணைப்பது. அனைத்துமெய்ஞானங்களையும் ஒன்றாக இணைத்து ஒரு Schema வை உருவக்குவதே கீதை என்று வாசித்தேன். ஆனால் வெண்முரசை அதன் வீச்சுடன் வாசிக்கையில்தான் கீதையின் அந்த இணைப்பு எத்தகையது என்று உண்மையிலேயே பிடிகிடைக்கிறது. எவ்வளவுபெரிய வரலாற்றுச் சந்தர்ப்பத்தில் பிரிந்திருந்த அத்தனை ஞானங்களுக்கும் நடுவே ஒரு vital ஆன முடிச்சை போட்டிருக்கிறார் என்று பார்த்தேன். மிகப்பெரிய ஒரு மனஎழுச்சி ஏற்பட்டது. கிருஷ்ணன் இல்லையேல் பாரதமே இல்லை


சரவணன்