Wednesday, December 6, 2017

அதிமானுடனா?




ஜெ,

பிரத்யும்னன் கிருஷ்ணனைப்பற்றிச் சொல்லும்போது ஒருவேளை அதுவும் சரிதானோ என எண்ணவைக்கிறீர்கள். அது மிகுந்த மனச்சோர்வை உருவாக்குகிறது.

இதெல்லாமே ஒரு மகாயோகி தன் இலட்சியத்துக்காக சாதாரண மானுடரை வைத்து விளையாடுவதனால்தானே நிகழ்ந்தது. நீங்கள் அயன் ராண்ட் பற்றி எழுதியபோது இதைத்தான் எழுதியிருந்தீர்கள். ஹிட்லர் ஸ்டாலின் எல்லாம் செய்தது இதைத்தான். நன்மை விளையலாம். விளையாமல்போனால் அந்த தியாகம் அழிவுக்கு எல்லாம் என்ன அர்த்தம்?

நான் கிருஷ்ணனை கடவுள் என்று நினைக்கவில்லை. ஒரு சரித்திரபுருஷர் என்றுதான் நினைக்கிறேன். அவன் நினைத்தது நடந்து பாரதவர்ஷத்துக்கு நன்மை நடந்தது என்றே எடுத்துக்கொள்வோம். ஆனால் அது நடக்காமல்போகக்கூட பாதிப்பங்கு வாய்ப்பிருந்தது அல்லவா? ஆகவே அத்தனைபேரழிவை மக்கள் மேல் ஏற்ற அவனுக்கேது உரிமை?

அது தான் எல்லா அறிவுமேதைகளும் நினைப்பது. அந்த ஆணவம்தான் உலகப்போர்களை எல்லாம் உருவாக்குகிறது. சாமானிய மக்கள் செத்தாலும் ஒரு கான்செப்ட் ஜெயித்தால் போதும் என்ற மனநிலைதானே அழிவு? ஹோவார்ட் ரோர்க் மனநிலை அதுதானே? மக்களுக்குச் சேவைசெய்யவே ‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு’ அதிகாரம் உண்டு. அவர்களை இஷ்டப்படி ஆட்டிவைக்க அல்ல என்று சொன்னவர் நீங்கள்தான்


பாஸ்கர்