Monday, January 15, 2018

விகர்ணன்



ஜெ

விகர்ணன் திடீரென்று அத்தனை அதிரடியாகப்பேசுவதைக் கண்டு திகைத்தேன். அவனுடைய கதாபாத்திரத்தின் இயல்பே அல்ல என்று நினைத்தேன். நாள் முழுக்க அதைப்பற்றித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். என் அம்மா ஊரிலிருக்கிறார்கள். வெண்முரசை தினமும் விரும்பி வாசிப்பவர்கள். அவர்களிடம் பேசினேன். அம்மா சொன்னார்கள் விகர்ணன் அப்படித்தான் செய்வான் என்று. நாம் ஒருவரை கேலி செய்ய ஆரம்பித்தால் அவர்கள் மூர்க்கமாக ஆகி கடுமையாகப்புண்படுத்தும்படிப் பேசுவதைக் காண்கிறோம். விகர்ணன் அப்படிப்பேசுவான் என்று கிருஷ்ணனுக்குத்தெரியுமா என்றுதான் மங்கலாகத் தெரிகிறது. அவர் வேண்டுமென்றே விகர்ணனை அப்படிப்பேசும் இடம் வரைக்கொண்டுவந்தாரா என்று யோசிக்கவேண்டியிருக்கிறது. விகர்ணன் அந்தப்பேச்சின் வழியாக அந்தச்சபையை அதன் உச்சிக்குக்கொண்டுபோய் யாருமே சமநிலையுடன் பேசமுடியாதபடி ஆக்கிவிட்டுவிட்டான்


ரகுநாதன்