Friday, January 5, 2018

நிலங்கள்



அன்புள்ள ஜெ,

சட்டென்று கதை விஜயை நோக்கிச் சென்றபோது இந்த உத்தியின் இன்னொரு முக்கியத்துவத்தை உணர்ந்தேன். மகாபாரதத்திலே பேசப்படாத பெண்களை பேசுவது உங்கள் நோக்கம். கூடவே போருக்குமுந்தைய மனநிலைகளைச் சொல்வதும். இரண்டையும் இணைத்துவிட்டீர்கள். ஆனால் இயல்பாக இன்னொரு விச்யமும் நடக்கிறது. கதை அஸ்தினபுரியிலெயே தேங்கிவிடாமல் பல நகரங்களையும் ஏற்கனவே சொல்லப்பட்ட ஊர்களையும் உள்ளே கொண்டுவருகிறது. சிபிநாடும் மத்ரநாடும் கதைக்குள் வருகிறது. ஒட்டுமொத்தமாக கதை பாரதவர்ஷம் முழுக்க நடந்துகொண்டிருப்பதாக உணரமுடிகிறது. இது ஒருமுக்கியமான விஷயமென நினைக்கிறேன்

பாலு கருணாகரன்