Monday, February 12, 2018

யானை



இனிய ஜெயமோகன் சாருக்கு
இன்றைய வெண்முரசில் “காலம் ஒரு களிறுபோல என் மேல் ஏறிச்சென்றுவிட்டது. சிதைந்த உடல் எஞ்சுகிறது” என்றாள் காளி ஒருமுறை.என்று ஒரு வரி.
என்னுடன் வேலை செய்யும் தோழி ஒருத்தியின் அம்மா சில வருடங்களாக படுத்த படுக்கையாய் இருக்கிறார்கள். மிகவும் மெலிந்து, மொட்டை அடிக்கப்பட்ட தலையுடன், எப்பொழுதுமே வலி நிறைந்த அழுகையுடன் கத்திக்கொண்டே இருப்பார்கள். எங்களைப் பார்த்தவுடன் சீக்கிரம்  செத்துப் போகணும்னு வேண்டிக்க சொல்வார்கள். ஒரு தடவை நான் அவர்களை பார்க்க போயிருக்கும்போது இருவர்க்கும் பொதுவான இன்னொரு தோழியும் அங்கிருந்தாள். வெளியில் வந்தவுடன் அவள் சொன்னது. நான் சின்ன பிள்ளையாய் இருக்கும்போது நாங்கள் ஒரே தெருவில் குடிஇருந்தோம். அப்ப இந்த அம்மாதான் தெருவிலேயே அழகி. செக்கச்சிவந்த நிறமும் நல்ல குண்டாகவும் முடி இடுப்பிற்கு கீழே விழும்படியகவும் இருப்பார்கள். அதெல்லாம் எங்க போச்சு என்று ரொம்ப வருத்தத்துடன் பேசினாள். அழகு என்பதற்கு அவள் வைத்துள்ளது ரொம்ப கறாரான ஸ்கேல். அதனால் அம்மா பேரழகியாக இருந்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இன்று இந்த வரிகளைப் படித்தவுடன் அவர்களை நினைத்துகொண்டேன். இப்போதும் இன்னும் மோசமான நிலையில் இருக்கிறார்கள்.

டெய்ஸி பிரிஸ்பேன்