Monday, February 5, 2018

வாசிப்புகள்


அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

ராஜகோபாலன் அவர்கள் அளித்த வெண்முரசு வாசிப்பின் முதன்மையான அம்சங்கள் கொண்ட வரைபடம் -எவ்வகை வாசிப்பும் இதனுள் அடங்கிவிடும்.  இதை புறம் எனக் கொள்கிறேன்.  எனினும் ஒவ்வொருவருக்கும்ஒரு தனிப்பட்டஅவர்களுக்கே உரித்தான அந்தரங்க காதலாக கருதத்தக்க வெண்முரசு வாசிப்புஇருக்கக்கூடும்.  எனக்கு இருக்கிறதுஅது என் ஆவல்என் காதல் சார்ந்தது.  மிகப்பெரும் புறவாழ்க்கையைகண்முன் விரித்து அதே அளவிலான அல்லது அதனினும் பெரிது என மிகைப்படுத்திக் கொள்ளத்தகக்க அகவாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள வெண்முரசு தரும் இடம் மிகப்பெரியது.

நாட்டார் கலைபௌராணிகம்தத்துவம்காவியகவித்துவம்வரலாறு என்று அந்தந்த இடங்களுக்கு ஏற்பமனம் அவ்வாறே அமைந்து கொள்கிறது.  வெறியாட்டு எழுந்த பூசகரின் முன் மெய்சிலிர்த்துக் கொள்கிறது.  பரமன் என்றுகுரு என்று உருகுகிறது.  வேதமுடி என்று தத்துவம் கருதுகிறது.  இயற்கையையின் கம்பீரஅழகு கொண்ட வேழம் மலையின் குழந்தை என்று மத்தகத்தில் துவங்கிபின் மலையினும் மேலுயர்ந்துகருமுகில்கள் என வான் பரவி திசை நிறைத்துஇன்று பிறை நிலவை தந்தம் எனக்கொண்டு இருட் பெருவெளியாவும் என்று விரிந்தது கண்டு புன்முறுவல் செய்கிறது.  வரலாற்றுக்குத் தன் பங்களிப்பாக வரலாற்றால்ஆதரப்பூர்வமாக நிரப்பப்படாத இடங்களை அதிகப்பட்ச தர்க்க நேர்த்தியுடன் வெண்முரசு கருதுகோள்களால்நிரப்புவது கண்டு வியக்கிறது.

இவை யாவற்றையும் இரண்டு வகைகளில் கொள்கிறேன்.  ஒன்று புறத்தில் இருந்து அகம் நோக்கி செல்கிறது.  வாசிப்பில் மனம் இத்தனை இடங்களை விதவிதமான உணர்வுகளுடன் எண்ணங்களுடன் கடந்த பின்சொல்லற்ற ஒரு உவகையைநிறைவை அடைகிறது.  வேறு செயல்களில் இருந்தாலும் வெளியேசுற்றிக்கொண்டு இருந்தாலும் "வெண்முரசுஎன்னும் சொல்லே ஒரு அதன் வாசிப்பின் இனிமையைநிறைவை நினைவுறுத்தி வெண்முரசை நோக்கி விரட்டுகிறது.  காதலியை காண்பதற்காக அல்லது ஊழ்கம்வாய்க்கும் என்பது போல.

இரண்டு.  நாட்டார் கலைபௌராணிகம்தத்துவம்காவியம்வரலாறு என்ற இவற்றின் பொதுவாக உள்ள ஒருஅம்சம் இதெல்லாவற்றிலும் கடந்த காலத்தை நோக்கி நிற்கிறோம் என்பது.  எவ்வகையிலும் வெண்முரசுகடந்த காலத்தை மட்டுமே சார்ந்தது அன்று.  அதன் கலையும் உணர்வும்ஊழ்கமும் நிகழ்கணத்துக்குரியவை.  அதன் தத்துவம் எக்காலத்துக்கும் உரியது.  வரலாற்று நோக்கில் வெண்முரசு கடந்தகாலத்தின் வெற்றிடங்களை நிரப்புவது மட்டும் அல்லஇந்நாட்டின் நிகழ்காலத்தின் அடிப்படை சமூகஅரசியல்பண்பாட்டின் நிலைஅருட்கொடையென அமைந்திருக்கும் சாதக அம்சங்கள்முட்கள் போன்றபாதக அம்சங்கள்சிக்கல்கள் என எல்லாவற்றின் வேர்களை கடந்த காலத்தில் தேடிச் சென்று கண்டடைகிறதுஅவை அன்று தோன்றிய விதம்இருந்த விதம்எதிர்கொள்ளப்பட்ட விதம் என்று விரிவாக நோக்குகிறது.  எவ்வாறெல்லாம் பயணித்து இன்று இவ்வாறு எட்டியது என்று ஒரு வரைபடத்தை அளிக்கிறது.  அத்துடன்நாளை எவ்வாறு செல்லக் கூடும் என்பதை ஊகிக்க வழி தருகிறது.  வெறும் ஊகம் அல்ல.  ஓரளவிற்குதைரியமாக அப்படித்தான் ஆகும் என்று உறுதியுடன் கூறிவிட முடியும்.  நேற்று இப்படித்தான் நடந்ததுஎன்பதற்கு, "ஆம் அப்படித்தான்.  அவ்வாறல்லாமல் வேறு எவ்வாறுஎன்று கூறத்தக்க தர்க்க நேர்த்திவெண்முரசில் உள்ளது.  அதேவிதமான எதிர்காலம் பற்றிய ஊகத்திலும் ஒரு நேர்த்தி - நம்பகத்தன்மைவெண்முரசின் வாயிலாக அமைத்துக் கொள்ள முடியும்.

நேற்று அசுரர் வேதம் என்று தொல்குடிகளின் பண்பாடு என்று வாழ்வியல் என்று வழிபாட்டு முறைகள் என்றுபூசல்கள் என்று இருந்ததுஅவை வேதமுடிபுக் கொள்கையின் கீழ் ஒன்றென இணைக்கப்பட்டுபூசல்களால்உண்டாகும் அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டுமுக்கியமானவை தொகுக்கப்பட்டு அவசியமற்றவைவிடப்பட்டு இந்த பாரதம் என்னும் பெருநிலத்தின் அகம் இணைக்கப்பட்டது.  இன்று வேதமுடிபுக் கொள்கைஉலகத்தின் பெருஞ்சமயங்களை இணைக்கஉலகம் முழுவதையும் இணைக்க பயணப்பட்டுக்கொண்டுஇருக்கிறது.  நாளை உலகின் அகம் அவ்வாறுதான் இணைக்கப்பட முடியும் என்று துணிந்து ஊகிக்க முடியும்.  குடித்தலைவன் என எழும் கண்ணன் பாரதப் பெருவெளியில் அனைவர்க்கும் உரியவன் என்றாகிஉலகம்உள்ளோர் அனைவர்க்கும் உரியவன் என்று எழுகிறான்.  சிவபெருமான் இன்று அமெரிக்கனுக்கு அந்நியன்அல்லஅங்கேயும் அவன் உள்ளம் கவர் கள்வன்தான்.  வேதமுடிபுக்குள் அறுசமயம் அன்று அய்ம்பெரும்கண்டங்களுடன் ஆறாயிரம் சமயங்களும் வரலாம்.  தனக்கயலாய் ஒன்றும் காணா வேதமுடிபு என்னும்அம்பாரி இட்டு யாவற்றையும் இணைத்து விடலாம்.  சுவாமி விவேகானந்தார் கண்ணன் குழல்ஊதிக்கொண்டுசிவபெருமான் உடுக்கை இசைத்துக் கொண்டு மேற்கே வருவார்கள் என்றார்.  அவர் குமரியில்பாறையில் அமர்ந்து இந்நிலத்தை நோக்கினார் என்கிறார்கள்.  வெண்முரசும் குமரியில் எழுகிறது.  தெற்கு திரிபோலுள்ளது போலும்.  இங்கு பற்றும் தனல்ஞானச் சுடர் எழுந்து உலகெலாம் உணர்ந்து ஓதற்கு ஒளிதரக்கூடும்.  போற்றிக் கொள்ளத்தக்க தம் வேதமுடிபுக் கொள்கையை இந்தியர்களே தலைமுழுகி விட்டாலும்இறை மேற்கே விழிப்பித்து பெரிது உயர்த்தி உலகில் அதை நிறுவக்கூடும்.

இங்கு கண்முன்னம் வியாஸன் மீண்டும் நிகழ்வது காண்கிறேன்.  யாவும் இங்கு அருளே என்பது என் வாசிப்பு.   நேற்றுஇன்றுநாளை எனதிசை இது என யாவற்றையும் அதுவே நடத்துகிறது.


அன்புடன்
விக்ரம்
கோவை