Monday, February 19, 2018

வைஷாலி

.

வைஷாலி,நாளவன் கோயிலில் அடையும்  காட்சி மயக்கங்கள்,அவளை மற்றுமன்றி ,வாசகர்களையும் அரைமயக்கத்திலே  ஆழ்த்தி, சிலுப்புறச்செய்தது என்றே சொல்ல வேண்டும்.எழுகதிரவனில் எழும் கதிரோனின் முகத்தைக்கண்டு ,கர்ணனது என்று திகைப்பதும்,கனவில் தான் கண்ட ,வெள்ளைப்புரவியில் ஊறும் ஆணழகனின் முகமானது தந்தையிடனுடையதா!மகனின்னுடையதாவென்று பிரித்தறிய முடியாமல் திணறி,தினப்படி தன் கணவனென்று, அவனை அடைய முடியாமல் ஞாயிறு சாஸ்திரம் தடுத்தாலும், அன்றாட வழிபாட்டு முறையிடுனூடாக ,செவ்வொளிப்பட்டு காட்சிமயக்குகளாக தொங்கும் காதுக்குழைப்போல ,மேற்க்கோபுரம் விளங்குவது முதல் ,கல் மலர்களும் மணம் வீசுமோ என்றும்,அசைந்துக்கொடுக்குமோ என்று ஐயுறும் படியாக ,ஒரு காட்சியையும் தவற விடாமல் ,சுற்றுச்சூழலாலே, முழுச்சூரியனால் தாக்குறப்பட்டு,உள்ளே கர்ப்பகிரகத்திலும் ,முகம் முதல் பாதம் வரையிலும் ,ஒவ்வொரு அவயத்தையும் தன்னிலிருத்தி ,சற்று முன் வெளி சந்தித்தவரையும் மறந்து தன்னிலைப்பாட்டாலே தன்னவனைக் கூடுவது அற்புதமேயாகும்.


அன்புடன்,
செல்வி அழகானந்தன்
கடலூர்.