Tuesday, February 6, 2018

கொலோசியம்



அன்புள்ள ஜெ

ஷத்ரியர்பேரவையை ரோமில் உள்ள கொலோசியத்தின் வடிவிலே அமைத்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். அது மிகப்பிரம்மாண்டமானது. ஏறத்தாழ மகாபாரதக் காலகட்டமும் கூட. ஆனால் இந்த சபை மூங்கிலால் அமைக்கப்பட்டது. மரத்தால் தளமிடப்பட்டது. கொலோசியத்தின் அமைப்பின் பிரம்மாண்டம் என்பது அவ்வளவுபெரிய கேலரி நடுவே பெரிய முற்றம். ஆனால் அந்த முற்றத்துக்கு அடியில் அவ்வளவுபெரிய அரண்மனை போன்ற இடம் உள்ளது என்பதுதான். சிறைச்சாலைகள் விலங்குகளுக்கான அறைகள் பயிற்சிசெய்யும் இடங்கள் அனைத்தும் முற்றத்துக்கு அடியிலேதான். மேலே உயர்குடிகள் வந்து இறங்குவார்கள். அவர்கள் கண்ணில் அடிமைகள் படவே மாட்டார்கள். அடிமைகளை அடியில் சென்றுசெர்ரும் வேறு பாதைகள் வழியாகக் கொண்டுவருவார்கள். அது ஒரு நரகம். புற்றிலிருந்து ஈசல் மாதிரி உள்ளிருந்து அடிமைகள் கிளம்பிவருவார்கள். நான் இரண்டுமுறை பார்த்து பிரமித்த இடம் அது


ஆனந்த் ராஜசேகர்