Thursday, March 1, 2018

வெண்முரசு வாசிப்பு



அன்புள்ள ஜெ,

நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்இந்த வருடத்துக்கான புதியவர்கள் சந்திப்பு ஒருங்கிணைவதாக செய்தி வாசித்தேன்உடனே தஞ்சை நினைவுகள்உங்களை சந்தித்து ஒரு வருடம் ஆகிவிட்டதா என்று தோன்றியதுஅந்த சந்திப்புக்கு வந்தவளை இப்போது இருப்பவளை ஒப்பிட்டு பார்க்கும்போது வந்த தொலைவு வெகுதூரமாகத் தெரிகிறதுஆழத்தில் பல மாறுதல்கள்அப்போது வந்தபோது செருக்குடன்பயமறியாமல்என் ஆற்றல் மீதும் திறன் மீதும் அறியாமை தரும் அபார நம்பிக்கையோடு துள்ளலுடன் ஓடி வந்ததாகத் தோன்றுகிறதுஇப்போது அப்படி அல்லபல இடங்களில் பல விதங்களில் ஆணவம் அடிவாங்கி உள்ளம் நிறைய ஐயங்கள்பயங்கள்குழப்பங்கள்பதற்றங்கள்வாசிப்புகதை எழுதுவதுமொழியாக்கம் என்று எதையாவது செய்துகொண்டே இருந்தாலும் திட்டமில்லாமலும்கவனக்குவியல் இல்லாமலும் செய்கிறேன்ஒன்றில் மூழ்கி விட்டால் அதிலிருந்து வெளிவந்து அடுத்த வேலைக்குள் இறங்குவது கடினமாக இருக்கிறதுகடிதம் எழுதாமல் விட்டதற்கு இந்த மனநிலையும் காரணம். (இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஆய்வுக்கூட வேலை செய்யும் வேளையில் இந்த பிரச்சனை இல்லைஅங்கு மொத்தமாக மனம் குவிந்து பகுத்து வேலைகளை முடிக்க முடிகிறதுஅதிலிருந்து விலகுவதும் கடினமாக இல்லைஎல்லாவற்றிற்கும் ஒரு விலகல் மனப்பான்மை தேவை போல).

வெண்முரசு வாசித்துக்கொண்டிருக்கிறேன்டிசம்பரில் ராஜமாணிக்கம் அவர்களுடன் நீங்கள் வெண்முரசை பற்றி பேசிக்கொண்டே வந்ததில் தொடர்ந்து படிக்காமல் விட்டுவிட்டேன் என்ற ஆதங்கம் மேலோங்கியதுஇதுவரை அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று எல்லா நாவல்களிலும் சில அத்தியாயங்களை வாசித்ததோடு சரிஇன்று நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெரும் செயற்பாட்டில் எப்படியும் இணைத்துவிட வேண்டும் என்று தோன்ற ஜனவரி ஒன்றாம் தேதியோடு வாசிக்க ஆரம்பித்தேன்முதற்கனல் எனக்கு மிகவும் பிடித்ததுபாரதத்தின் விதைகளால் கட்டிய மாலை என்று சொல்லறத்தோன்றுகிறதுசில நாட்களுக்கு முன்னால் பனிமலைகளில் சூரியன் உதித்து அவற்றின் முகடுகள் பொன்னாகும் காட்சியை பார்த்தபோது முதற்கனலில் வரும் ஒரு வரி நினைவுக்கு வந்ததுஅந்த பொன்னை தேவியின் சிம்மத்துடன் ஒப்பிடும் உவமை அதுமலைக்காட்சிகளை நமக்கு ரசிக்கக்கற்பித்தவனே காளிதாசன் என்று நடராஜ குரு ஒரு இடத்தில் சொல்வதாக நீங்கள் எழுதிய நினைவுஅதை நினைத்துக்கொண்டேன்இந்த உவமை அப்படியான ஒன்று.

மழைப்பாடல் வாசிப்பனுபவம் மிகச்சில புத்தகங்கள் அளிக்கக்கூடியதுடால்ஸ்டாயை கணம்தோறும் நினைத்துக்கொண்டேன்பதினெட்டு நாட்கள் ஆனது வாசிக்கஒரு கட்டத்துக்கு மேல் இது முடியவே கூடாதுபோய்க்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியபடி இருந்ததுநிலங்களும் மனிதர்களும் மட்டும் தான்ஆனால் எல்லா கதைகளும் அவ்வளவுதான் என்றும் தோன்றியதுநிலமும் மனிதரும்மழைப்பாடலில் வந்த நிலைக்காட்சிகள் அனைத்தும் பதினோரு வயதுக் கண்களால் பார்த்தேன்எனக்கு பதினோரு வயது இருக்கும் போது பத்தே பத்து நாட்களுக்கு வட இந்தியாவை சுற்றி அப்பா அம்மா  பயணம் அழைத்துச்சென்றார்கள்அப்போது பார்த்த கங்கை - ரிஷிகேஷ் லட்சுமண் ஜூலா - இமாசல பனிமலைகள் - அந்த உயரமும் குளிரும் - பியாஸ்சட்லஜ் நதிகளின் நீலம் எல்லாம் தான் மழைப்பாடலின் களமாக மனதில் மாறியதுஒவ்வொன்றும் அவ்வளவு பளிச்சென்றுதெரிந்த உலகங்களிலிருந்து தான் நாம் தெரியாத உலகங்களுக்குச் செல்கிறோம் என்று தோன்றியதுஅந்த வயதுப்பயணங்கள் எவ்வளவு முக்கியம்மனதின் பாகமாகவே ஆகிவிடுகின்றன அல்லவாமழைப்பாடலின் நிலங்கள் அதே நிலங்களை இன்னும் பழையவையாகஇன்னும் தனித்தன்மையானவையாகஇன்னும் அழகானவையாகக் காட்சிப்படுத்தியது 

மழைப்பாடலில் வரும் வரலாற்றுக்காட்சிகள் அற்புதமானவைபீஷ்மரும் பலபத்ரரும் மொஹஞ்சதாரோவை காணும் காட்சிமலைவாழ் மக்கள் - அவர்கள் இன்றைய ஷெர்பாக்கலைப்போன்றவர்கள் என்று நினைக்கிறேன் - கற்கால குகை ஓவியங்களை காண்பது போன்ற இடங்கள்பாரத மனிதர்களை புராண நாயகர்களாக மட்டும் இல்லாமல் வரலாற்றில் கால் பதித்து நடக்கும்வரலாற்றின் நீளத்தைக் கண்டு திகைக்கும் ஆட்களாக இந்த நாவலிலேயே வர முடியும்வண்ணக்கடலில் இதே பாத்திரங்கள் புராணஇதிகாசகாவிய பாத்திரங்களாக வருகிறார்கள்அவர்கள் மொகஞ்சதாரோக்களை பார்க்கமுடியுமா என்று தெரியவில்லை.

பீஷ்மரின் பாத்திரத்தை முதற்கனல்மழைப்பாடல்வண்ணக்கடல் என்று வைத்துப்பார்க்கும் போது அது ஒன்று அளிக்கும் விரிவே பிரமிப்பாக உள்ளதுஇந்த கிழவனார் பாரதப்போர் வரை இருந்து இதையெல்லாம் பார்க்கவிருக்கிறாரா என்ற மலைப்புஆனால் மழைப்பாடல் பீஷ்மர் எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம்பிதாமகர்பிதாமகர் என்று சொல்லி கேட்டிருந்தினாலும் இந்திய சிந்தனையில் அதன் உளவியல் புரிந்தது இதில் தான்சௌபால சகுனி பீஷ்மரை தன் பிதாமகர் என்று கொள்ளும் இடம்திருதராஷ்டிரன் அவரோடு மற்போரிட்டு தோற்று அழுது மனத்தால் பணிந்து அவரை ஏற்றுக்கொள்வது. (பீஷ்மர் திருதராஷ்ட்டிரன் தோளில் கைபோட்டு நடக்கும் ஷண்முகவேலின் படம் அற்புதமான ஒன்று). பின் துரியோதனனும் பீஷ்மரின் கடைக்கண் பார்வைக்காக ஏங்குகிறான்வெண்முரசின் அன்னைகளைப்போல தந்தைகளும் தாதைகளும் மகத்தான பாத்திரங்களாக தெரிகிறார்கள்


வெண்முரசில் இதுவரையில் எனக்கு மிகப்பிடித்த பாத்திர வார்ப்பு திருதராஷ்ட்டிரனுடையதுலியர் படித்தபோது அவன் திருதராஷ்ட்டிரனை நினைவு படித்துகிறான் என்று குறிப்பு எழுதிக்கொண்டே இருந்தேன்வெண்முரசு திருதராஷ்ட்டிரன் லியரையே நினைவுக்கு கொண்டு வருகிறார்குருட்டு அரசன் என்பது ஏதாவது பழைய ஆர்கிடைப்பா என்று தெரியவில்லை - வியாசனும் ஷேக்ஸ்பியரும் எப்படி ஒரே கருவை கண்டடைந்தார்கள் என்பது வியப்பு தான்வெண்முரசில் வரும் திருதராஷ்ட்டிரனை tragedy-யின் நிழல் பின்தொடர்ந்தபடியே உள்ளதுபெரிய குழந்தையைப்போல இருக்கிறான்பதற்றமும் ஆசையும் மூர்க்கமும் பேரன்புமாய்அதுவே அவனை அணைத்துக்கொள்ள வேண்டும்அவன் சிந்தப்போகும் கண்ணீரையெல்லாம் இப்போதே துடைக்க ஆரம்பிக்க வேண்டும் என்ற உணர்வை அளிக்கிறது என்று நினைக்கிறேன். "மூடாமூடாஎன்று சொல்வது முதலில் இடித்ததுபின் அவனுடைய பிரத்யேக சொல்லாட்சியாகவே ஆகியதுஆதிப்பெரிய மூடனே இவன் தானே என்று எண்ணும் போது அந்த சொல்லாட்சியில் உள்ள அங்கதம் உறைக்கிறதுவலிக்கிறதுஅவன் மற்போர் செய்யும் இடம்இசை ரசிக்கும் இடம்அவருக்கும் தீர்க்கசியாமறிக்குமான உரையாடல்கள்உணவுண்ணும் இடம்மணநாளுக்காக அவசரப்பட்டு காத்து நிற்கும் இடம்முடிசூட அலங்கரித்து காத்திருந்துமுடி தனக்கல்லதம்பிக்கு என்று தெரியவரும் போது அவன் காட்டும் பெருந்தன்மைதுரியோதனன் பிறக்கும் போது அவன் கொள்ளும் ஆனந்தம்பீமனை முதல்முறை சந்திப்பது என்று அவன் மிகப்பெரிய பாத்திரமாக வருகிறான்நாவலுக்கு நாவல் பாத்திரங்களில் உருவாகும் காலமாற்றங்களை கவனிப்பதே எளியஆனால் ஆழமான வாசிப்புக்கு வழிவகுக்குகிறதுபாரதம் தெரிந்த கதை என்பதால் அது 'எப்படிநிகழ்த்தப்படுகிறது என்பதில் தான் சுவாரசியம்அந்த வகையில் மேலும் படிக்கப்படிக்க திருதராஷ்ட்டிரனை தொடர்ந்து கவனிப்பேன்.

பெரிய பாத்திரங்களில் சகுனி-குந்தி-விதுரன் ஆடும் முக்கோண ஆட்டம் பாரதத்தின் அஸ்திவாரம் என்று தோன்றியதுஇவர்கள் மூவருமே பாரதத்தின் game-changers. ஆனால் வெண்முரசில் அவர்களின்  பாத்திர வார்ப்பு ஏனோ முதலில் ஒவ்வாமையை அளித்ததுவிதுரரின் சமத்காரம்-ஏளனம்குந்தியின் கணக்குகள்சகுனியின் காயநகர்வுகள் எல்லாமுமேஆனால் நாவல் முடியும் தருவாயில் மூன்று கதாபாத்திரங்களுமே கனிந்து வந்தது போன்ற உணர்வுஎப்படியோ எல்லாமுமே வாழ்வின் விதிகளுக்குள் விழுந்துவிட்டதாக தோன்றியதுமூவருமே மனிதர்களாகிறார்கள்அவர்கள் அடைந்து கடக்கும் வலிகளே அதற்கு காரணம் என்று சொல்லலாம்

சின்னச்சின்ன பாத்திரங்களை பற்றி பேசவேண்டும்சியாமைஅனகைதீர்க்கசியாமர் என்று ஒரு பட்டியல்சிவையின் கதை முதற்கனலிலிருந்து மழைப்பாடல் வரை ஒரு முழு வாழ்வை கடந்து செல்கிறதுகாணாத  காவியமெல்லாம் கற்றவள்வியாசரின் மகனை பெற்றவள்அவள் வாழ்வு கொள்ளும் திசை மட்டும் எத்தனை கசப்பானதுஆனால் அவள் செயல் தானே அதுஅவள் தன்னுடைய ஆரத்தை முன்னாள் தோழிக்கு கிழற்றி வீசும் சித்திரத்தை என் வாழ்விலேயே குடும்பத்திலேயே கண்டிருக்கிறேன்பாவம் சிவைகள்அவர்களுக்கு முடிந்தது அவ்வளவுதான் என்று - முகம் சுழித்து அல்ல - கருணையுடன் சொல்லத் தோன்றுகிறது இதை வாசிக்கையில்.

குடும்பக்கதை என்பதால் எத்தனை மணங்கள்இரவுகள்மண வாழ்வுகள்காந்தாரிகளின் மண வாழ்வு சில நாட்களிலேயே கொள்ளும் சரிவும் கசப்பும்குந்திக்கும் பாண்டுவுக்குமான அசாதாரண உறவுவிதுரனும் சுருதையும் நிகழ்த்தும் இணைவான மணவாழ்க்கைஆதிரதனும் ராதையும் கூட ஒரே நிகழ்வில் வந்தாலும்நாயையும் குழந்தையையும் கொஞ்சும் விதத்தில் வெளிப்படும் மணவாழ்வின் மகிழ்வு புன்னகை வரவழைத்ததுஎவ்வளவோ சொல்கிறோம்குடும்பமும் குழந்தையும் அல்லாது வாழ்வில் மகிழ்வென்ன மகிழ்வு என்று தோன்றிவிட்டது.

பெரிய நாவல்கள் வாசிப்பது அப்படி ஒரு கொண்டாட்டம்அதனுடன் சேர்ந்தே வாழ்ந்துவிடுகிறோம்விஷ்ணுபுரம் போன்ற நாவலும் பெரியது தான்ஆனால் காலங்கள் கடப்பதால் அதன் வாசிப்பனுபவம் வேறாக உள்ளதுமழைப்பாடல்வார் அண்ட் பீஸ் எல்லாம் சில வருடங்களை நுன்னிப்பாக கடந்து செல்வதால் வெளிவருவதே சற்று கடினம்மழைப்பாடலில் பாண்டு தந்தையாகும் இடம் அவ்வளவு பெரிய உச்சம்பாரதமே தந்தையாகுதலின் கதை என்று சொல்லத்தோன்றுகிறதுசாந்தோகிய உபநிஷத்தின் வரி என்று உங்களுடைய பல கதைகளில் வரும் அந்த மேற்கோளை நினைத்துக்கொண்டேன் - இங்கும் வருகிறதுஅவன் இறந்த போது அழுத்துக்கொண்டிருந்தேன்அவன் இறந்தான் என்று அல்லஅவன் தலை மேலிருந்து மட்டுமே அதுவரை உலகை பார்த்த தருமன் இரக்கப்பட்டு மண்ணில் நின்றான் என்பதை எண்ணித்தான் ("புக்கு முடிஞ்சிடிச்சின்னு தானே அழற?" 

வருண் கேட்ட கேள்வி). கடைசியாக புத்தகம் படித்து இப்படி அழுததும் ஒரு தந்தை-மகனுக்காக - ஹெக்ட்டர் இறுதிப்போருக்கு செல்லும் போது மகன் அவனுடைய தலைக்கவசத்தைக்கண்டு அழுவான்அதைக்கண்டு ஹெக்ட்டர் அதை  கழற்றுவான் - அப்போதுநாவல் முடிவுக்கு வரும்போது அப்படி ஒரு வெறுமைதந்தை இறந்துவிடுகிறார்ஒரு அம்மா தீப்பாய்கிறாள்அம்பிகையும் அம்பாலிகையும் விளையாட்டுகளையும் பாவைகளை ஒதுக்கிவைத்து போல் வாழ்வை ஒதுக்கிவிட்டு சத்யவதியோடு கான்புகுந்து வாழ்வை கடக்கிறார்கள்அப்போது நாவல் முழுவதும் கேட்கும் மழைப்பாடல் மங்கலமாகவே ஒலித்தது.

வாசித்து முடித்து பலநாட்களுக்கு அந்த பாடலின் வரிகளே மனதில் ஓடிக்கொண்டிருந்ததுபச்சையானவன்புள்ளிவைத்தவன் என்றெல்லாம் வருகிறதுஎன்ன கவிதை என்ன கவிதை என்று மனம் ஏங்கியதுபின் தவளைகள் கத்தும் சப்தத்தை எடுத்து போட்டு கேட்டேன்மங்கலமாகவே ஒலித்ததுமழை நினைவுகளை மண் நினைவுகளை கொண்டுவந்ததுஒட்டுமொத்த வாழ்க்கையை பல நூருமுறை வாழ்ந்த கிழவியாக உணர்ந்தேன்ஆம்இவைகளின் ஆர்வமிகுவாழ்வளிக்கும் சப்தம் தான் இதற்கு மங்களம்.


சுசித்ரா ராமச்சந்திரன்