Saturday, March 3, 2018

பார்த்தசாரதி



இனிய ஜெயம் 

உண்மையில் வெண்முரசின் அலைகளில் திரள்வது பகுப்பு இந்த அளவு நிலை குலைய வைக்கும் என நினைத்தே பார்க்கவில்லை . திருமணம் முதல் காம்பில்ய போர் வரை இருவரும் சர்வவல்லமையுடன் திரௌபதி முன் சரிகிறார்கள் .   திரௌபதி திருமணத்தில் அந்த விழாவில் ,அவளுக்கு அகம்படியாக துரியனும் கர்ணனும் வாளேந்தி நிற்கிறார்கள்திரௌபதியின் ஆளுமை  அவர்களை எப்போதும் நிலை அழிவில் வைத்திருக்கிறது .மயநீர் மாளிகையில் துரியன் திரௌபதி காலடியில் விழுகிறான் . கர்ணன் ,கொடுத்து செல்ல மட்டுமே இங்கே வந்தவன் ,முதன் முறையாக நாக குழந்தைக்காக எடுத்து செல்வேன்என்கிறான் .எடுத்து செல்லும் அவனிடம் இல்லாத அந்த குணத்தை கைக்கொள்ள இந்த உலகை ஏழு முறை அழிக்கும் வஞ்சத்தை  கர்ணன் தன்னுள் ஏற்றுக் கொள்கிறான்

அந்த வஞ்சமே திரௌபதியை  கர்ணன் துரியன் இருவரையும் அவமதிக்க செய்கிறதுதிரௌபதி முன்னிலையில் கர்ணன் துரியன் இருவரும் வேறு வேறல்ல .ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் .

இன்று இதோ துரியன் யார் என முற்றிலும் தெரிய வரும் ஒரு மௌன கணம் அது கர்ணன் முன் நிகழ்கிறது . துரியன் தந்தையை துறந்து கலியை ஏற்கிறான் .ஏன் .நிலத்தின் பொருட்டு .

துரியன் தனக்குள் என சொல்கிறான் .கர்ணன் முன் 

//  சில கணங்கள் தயங்கி முனகல்போலஆம், அனைத்தும் முடிந்துவிடும். முடிக்குரியவர் எவர் என்ற ஐயமே எவருக்குமிருக்காதுஎன்றான் துரியோதனன். //

துரியன்  தந்தையை துறந்தது நிலத்தின் பொருட்டே .அந்த நிலம் கர்ணனுக்கு உரியது  என்பதே துரியனின் அக ஆழம் சொல்லும் உண்மை . கர்ணன் கொடுத்து செல்ல மட்டுமே வந்தவன் .அவன் எதையும் கொள்ள மாட்டான் . இப்போது அறிகிறேன்  துரியன் கர்ணன் பொருட்டே நிலத்தை கொள்கிறான்ஈரேழு பிறவி நரகத்தில் உழலும் பழி . அதை ஏற்றுக் கொள்கிறான் துரியன் . கர்ணன் விட்டுத்தர கூடாத நிலத்தின் பொருட்டு . கர்ணனின் பொருட்டு .   நாயகன் ,நாயகன் நட்பின் நாயகன் அவன்

கர்ணன் ஆற்றிய அத்தனை இழி செயலும் துரியனின் பொருட்டு அவன்  மாய்கையில் துலா முள் நிலை கொள்ளும் . அவன் கொடுத்து செல்ல மட்டுமே வந்தவன் .அவன் விண்ணகம் ஏகுகயில்  அவன் கொண்டதும் கொடுத்தும் சமம் என்றாகி துலா முள் நிலை கொள்ளும் .

பரசுராமன் சத்ரிய குருதியால் ஐந்து குளங்களை நிறைக்கிறான்மறத்தை அறத்தால் நிகர் செய்கிறான் , பழியை வஞ்சத்தால் நிகர் செய்கிறான் . எஞ்சியத்து ஒன்றே ஒன்று .அவனால் வீழ்ந்த குருதி . பல்லாண்டு தவம் செய்து அந்த குருதிப் பெருக்கை ,தனது கண்ணீர் பெருக்கால் சமன் செய்கிறான் .

துரியன் கர்ணன் பீஷ்மன் அனைவருமே  இந்த சமநிலை நோக்கி எதோ ஒன்றை விலையாக வைக்கிறார்கள் . விதிவிதியின் பிள்ளைகள் .

இரவெல்லாம்  நீலனின் நினைவு .அவனை இன்றே இப்போதே பார்த்து விட வேண்டும் என்ற தவிப்பு . அதிகாலை கிளம்பி சென்னை சென்றேன் .அல்லிக்கேணி .சென்று  பார்த்த சாரதியை பார்த்தேன்கையில் சக்கரம் இல்லை . வெண் சங்கு மட்டும் . ஆயுதத்தை விடுத்து விவேகம் மட்டுமே கைக்கொண்ட கோலம் .பார்த்த சாரதி

மொத்த வெண் முரசில்  பரசுராமன்  நிகர் வைத்த அளவு நிகர் வைத்தவன் நீலன் மட்டுமே .துரியன் ,கர்ணன் போன்ற மேன்மைகளை முடித்து வைக்க அவன் எதை விலையாக தர வேண்டுமோ ,அரசு ,மக்கள் ,பிள்ளைகள் ,நட்பு ,உட்பட அனைத்தயும் விலையாக தருகிறான் .    விதி சமைப்பவன் விதி அது


மனம் அலைக்கழிப்பை இழந்து சமன் கண்டு நின்றது . எந்த வேண்டுதலும் இல்லை . சும்மா அவனை கொஞ்சநேரம்  பார்த்து விட்டு  திரும்பி அடுத்த பேருந்து பிடித்து வீடு வந்து சேர்ந்தேன்