Sunday, March 4, 2018

உவமைகள்



ஜெ

வேள்விச்சபை விவாதங்கள் விஷ்ணுபுரம் ஞானசபை விவாதங்களை நினைவூட்டின. முன்பொருமுறை பேசும்போது சொன்னீர்கள் இலக்கியத்தில் மெய்யான தத்துவ விவாதம் அப்படியே வரமுடியாது என்று. இலக்கியம் அதை நடித்துத்தான் காட்டுகிறது. இலக்கியத்தில் வரும் தத்துவம் இலக்கியமாகவே இருக்கும். இலக்கியம் என்பது open ended  வாசகனுக்கான ambiguity  விடப்பட்டிருக்கும். தத்துவத்தில் அதற்கு இடமில்லை. விஷ்ணுபுரம் பதிப்பின் முன்னுரையிலும் அதைச் சொல்லியிருந்தீர்கள். இந்நாவலிலும் அதையே உணரமுடிந்தது. ஏராளமான உவமைகள் வழியாகவே இந்த விவாதம் நடைபெறுகிறது. ஆனால் உவமைகள் தத்துவத்தில் பயன்படுத்தப்படுவது போல open ended ஆக பயன்படுத்தப்படவில்லை. ஆக கவிதையின் படிமங்களாகவே உள்ளன. கல்லில் தீ போல உள்ளத்தின் ஆனந்தம் என்பதுதான் உச்சகட்ட கவிதை இதில்


ராஜ்மோகன்