Tuesday, March 6, 2018

உவமைகள்



முட்டை உடைத்தெழுந்த வாத்துக்குஞ்சுகள் அன்னையைத் தொடர்வதுபோல, அகிடிருக்கும் இடம் பிறந்ததுமே கன்றுக்குத் தெரிவதுபோல குருதியில் ஊறிப் படியவேண்டும் வேதம்

பறவைச்சிறகில் காற்றும் வானமும் என [வேதத்தை உள்ளம் உணர்வது]

இங்கு திரண்டுள்ள நாங்கள் அனைவரும் மீன்கள், எங்களை கொண்டுசெல்லும் கங்கைப்பெருக்கே வேதவேள்வி.

[வேள்வி என்பது ] மலர்க்காடு புக்கு தேன்வெளி கண்டு மீண்டு கூடுவரும் தேனீ தன்னவர்க்கு அறிவிக்க ஆடிப்பாடும் நடனம்

இந்த எரிகுளம் சாவின் வாய். நம்மை அது உண்க! இந்த எரிகுளம் அன்னைக் கருவழி. நம்மை அது ஈன்றெடுக்கட்டும்.

பல்லாயிரம் சிதலெறும்புகள் கூடி பலநூறாண்டுகளாக எழுப்பும் புற்றுக்கூடு- வேள்வி என்பது

வேள்விசெய்பவர்கள்-- நாம் வேரில் நீரூற்றுகிறோம். பல்லாண்டுகாலம் அதை செய்தபின்னரே கனியின் சுவைபெறுகிறோம்

 ஒர் உரையில் கௌதமசிரகாரி சொல்லும் உவமைகள் இவை. இந்த உவமைகளின் தொகுப்பாக அவருடைய ஞானத்தை எளிதில்புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன். இவை தனித்தனியான கவிதைகளாகவும் நின்றிருக்கிறது


லட்சுமணன்