Friday, April 20, 2018

எழுதழல்- பாண்டியன் ராமையா



அபிமன்யூவை அறிமுகப் படுத்துகிறார் ஜெயமோகன். குதிரைப் பாய்ச்சலில் பயணிக்கிறது எழுதழல். சுபகை, கணிகர், முண்டன் போன்ற வெண்முரசின் புனைவுக் கதாமாந்தர் வரிசையில் பிரலம்பன் சேர்கிறான். அபிமன்யூவிடம் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கும் இடங்களை புன்னகையுடனும், ‘களுக்’ என்ற சிரிப்புடனும் கடக்கலாம்.. எனக்கு என்னவோ, ஜெயமோகன் தன்னைத்தானே மகாபாரத கௌரவ, பாண்டவ, யாதவர்களுடன் பழக விரும்பி, இப்படி மாற்றுரு கொண்டு கதையில் கதாபாத்திரங்களாக மாற்றிக் கொள்கிறார் எனத் தோன்றுகிறது

எழுதழல் | ஜெயமோகன் பாண்டியன் ராமையா எழுதிய குறிப்பு