Sunday, April 8, 2018

சுலபைக்கு ஜனகரின் பதில்கள்


ஜெ

சுலபையின் கேள்விகள் நேர்த்தியானவை என்று சொன்ன ஒரு நண்பர் அவற்றுக்கான பதில்கள் சரியாக இல்லை என்று சொல்லியிருந்தார். அந்தக்கேள்விகள் தத்துவார்த்தமானவை. பதில்கள் ஆன்மிகமாகவே இருக்கமுடியும். Philosophical ஆன கேள்விகளுக்கு metaphysical ஆன பதில்களையே சொல்லமுடியும். அதுதான் நடக்கிறது/ கீதையே அப்படி ஒருபதில்தான். அதை ஏற்றுக்கொள்ளாமலிருந்தால் அது நம் தரப்பு. அதை எவரும் comvince செய்ய முடியாது.

ஏன் செயலாற்றவேண்டும் என்ற கேள்விக்கு செயலாற்றாமலிருக்க முடியாது. செயலாற்றாமலிருப்பதே ஒரு செயல்தான் என்கிறார் ஜனகர்

அறிபவன் என்பது ஒரு நிலை அல்ல. அதன் கடைசி நிலையில் தன்னிலை அழிந்து உண்மையைக் காணக்கூடும் என்கிறார்.  [சித்தம் கடந்து செயலென்று அதை காண்பவர் தெளிபொருளில் தெளியாததை காணக்கூடும்] அலைகளை காண்பவர் கரையில் இருப்பவர். அலைமேல் பறக்கும்பறவை ஒரே அலையையே கடல் என்று காணக்கூடும்.

இப்படி ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்லப்பட்டுள்ளது

சுவாமி